சனி, 2 டிசம்பர், 2023

கண்ணன் கட்டளைக்கலித்துறை

கதிர்தி கிரியான் மறைத்த கடல்வண்ணன் காட்சிதர
கதிர்தி கிரியான் மறைத்த கடல்வண்ணன் காட்சிபெற
கதிர்தி கிரியான் மறைத்த கடல்வண்ணன் காட்சிதர
கதிர்தி கிரியான் மறைத்த கடல்வண்ணக்  காட்சியதே
#கட்டளைக்கலித்துறை 

படம்

கதிர் திகிரியால் மறைத்த கடல்வண்ணன் காட்சி தர
கதிர் திகிரியான் மறைத்த கடல்வண்ணன் காட்சி பெற
கதிர்திகிரி யான் மறைத்த கடல்வண்ணன் காட்சி தர
கதிர்திகிரியான் மறைத்த கடல் வண்ணக் காட்சியதே


சூரியனை தனது சக்கரத்தால் மறைத்த கடல்வண்ணன் ( கண்ணன் ) காட்சி தர ( தனது விஸ்வரூபம் காட்ட)

கதிர் திகிரியான் ( சுடரொளியான சக்கரம் வைத்துள்ள கண்ணன் (மற்றவர்களுக்கு) மறைத்த காட்சியை கரிய நிறம் கொண்ட அர்ஜுனன் காட்சிபெற

ஒளிச்சக்கரமாக விளங்கும் தன் ஞானத்தால் 'யான்" என்னும் அகந்தையை மறைத்த கரிய நிறம் கொண்ட வேத வியாசர் காட்சி தர ( சஞ்சயனுக்கு ஞானக் கண் ஊடாக , நமக்கு பாரதம் எனும் கதையின் ஊடாக)

கண்ணபிரான் மறைத்த கடல் போன்ற ஆழமான பகவத் கீதை நமக்கெல்லாம் அழகிய காட்சியாகக்  கிடைத்ததே


வேத வியாசர் - கிருஷ்ண த்வைபாயனர் ( கருமை நிறத் தோற்றம் உடையதால் கிருஷ்ண , தீவில் ( த்வீபத்தில்) பிறந்ததால் த்வைபாயனர் என்ற பெயர் பெற்றார் . பாரதப் போருக்கு முன்பு அவர் சஞ்சயனுக்கு அகக் கண்ணால் போரை காணும் ஆற்றலை அளித்தார் 


"கதிர்திகிரியான் மறைத்த கடல்வண்ணன்" எனும் சொல்லாடல் சிலம்பிதகரத்தில் வருகின்றது ஆய்ச்சியர் குரவையில், இந்த சொற்றொடர் கண்டபின் இதனையே ஒரு யமகமாக அமைக்க எழுந்த அவாவின் விளைவு இப்பாடல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அங்கிசேர் அறுசீர் மண்டிலம்

அங்கிசேர் பொறியா முக்கண்           அங்கிசேர் சான விக்கண்  தங்குசீர் கிரண மாறுஞ்          சண்முகத் தேவாய்த் தோன்று  மங்குதீர் நிச்ச லன்றன்   ...