வியாழன், 21 டிசம்பர், 2023

கல்லா லடியமர் நால்வர்க் கருடந்த கங்கைபதி கல்லா லடிதொட கௌதம வில்லாள் கதியளித்தோன் கல்லா லடைமழை காத்தருட் கண்ணனு மொப்படைக்க கல்லா வடியனைக் காக்க வருவர் கடைவழிக்கே

கட்டளைக்கலித்துறை 

கல்லால் மரத்தடியில் மௌன குருவாக சனகாதி முனிவர்கட்கு அருள் தந்த கங்கை பதி - சிவபெருமான் தனது பாதத்தால் கல்லைத் தொட கௌதம மஹரிஷியின் மனைவியான அகலிகையாரின் சாபம் நீக்கிய இராமபிரான் கல்லால் ( மலையால்) அடை மழையைக் காத்த கண்ணபிரான்

ஆகிய கடவுளர் கல்லாப் பத்தனை வந்து காப்பர் இறுதிப் பற்றாக , அவர்களிடத்தில் ஒப்படைப்பு இருக்குமாயின். கல்வியை விட சரணாகதியே சிறப்பு என்பது கருத்து

 

 

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி