திங்கள், 25 டிசம்பர், 2023

திருவானைக்கா திருவிருத்தம்

வருமானை காவுறை வள்ளிக் கடைவு மணவாளனை
உருமானைக் காவுறை யோடி வெருட்டிய வுத்தமனைத்
திருவானை காவுரை செய்யத் துணிந்தேன் திருவிருத்தந்
திருவானைக் காவுறைச் சேயூரான் காக்குந் திருவடியே

கட்டளைக் கலித்துறை

 




வருமானைஇடமிருந்து  ( விநாயகர் ஆனை உருவில் ) காவலாக உறையும் வள்ளிக்கு அடைவான  மணவாளனையும் ( முருகனையும்)

காவுறை ( சோலையில் உறையும்) உருமானை ( மானுருவில் வந்த மாரீசன் ) ஓடி வெருட்டிய உத்தமனையும் ( இராமனையும் )

திருவானை ( மங்களமான ஆனைமுகரான விநாயகரையும்) கா ( காப்பாகக் கொண்டு) உரை செய்யத் துணிந்தேன் திருவிருத்தம் ( கட்டளைக் கலித்துறை)

திருவானைக்கா எனும் திருப்பதியில் உறையும் சேயூரான் ( ரிஷப வாகனத்தவன் - சிவன்) காக்கும் திருவடியே ( அவனது காக்கும் திருவடியின்மீது)

என்றவாறு  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...