அஞ்சுமாறு மெட்டுமே வந்துவந்த வாழ்விலே
அஞ்சுமாறு மெட்டுமே வந்துவந்து வாழவே வருவாளே
அஞ்சுமாறு மெட்டுமே வந்துவந்த வாழ்விலே
அஞ்சுமாறு மெட்டுமே வந்துவந்து வாழவே வரமாக
அஞ்சுமாறு மெட்டுமே வந்துவந்த வாழ்விலே
அஞ்சுமாறு மெட்டுமே வந்துவந்து வாழவே தருவாயே
அஞ்சுமாறு மெட்டுமே வந்துவந்த வாழ்விலே
அஞ்சுமாறு மெட்டுமே வந்துவந்து வாழவே பெருமாளே
9 சீர் ஆசிரிய விருத்தம்
1.
அஞ்சுமாறு மெட்டு மேவு அந்து வந்த ஆழ்விலே
அஞ்சும் ஆறு மெட்டு மேவு அந்து உவந்து வாழவே வருவாளே
அஞ்சலூட்டும் வகையில் மலைகளை மேவி அப்படி வந்த ஆழ்விலே ( ஆழ்தவத்திலே ) - பகீரனது
பிறருக்கு அச்சம் தரவல்ல கட்டுப்படுத்த வியலாத வாறு ஆகாயத்தில் ஓடிக் கொண்டிருந்த ஆறான கங்கை , (பூவுலகில் ) வந்திறங்கியது பகீரனது முன்னோர்களும் இங்குள்ள மக்களும் வாழும் பொருட்டு
2.
அஞ்சுமாறு மெட்டு மேவு அந்து வந்த ஆழ்விலே
அஞ்சு மாறு மெட்டு மேவு அந்து உவந்து வாழவே வரமாக
அஞ்சும்படியாக இராகம் வந்து எனது வாழ்வின் முடிவைக் குறிக்கும் என்ற ஆழ்வில் ( வருத்தத்தில் யாமிருக்கோம் போது)
அவ்வச்சம் மாறி இன்பமான மெட்டு மேவுமாறு யாமுவந்து வாழவே வரமாக
3.
அஞ்சும் ஆறும் எட்டுமே வந்து வந்த ஆழ்விலே
அஞ்சும் ஆறும் எட்டுமே வந்து உவந்து வாழவே தருவாயே
ஐம்புலனும் ஆறாமறிவான மனமும் எட்டிவந்து ( உயர்ந்த பொருளை நோக்கி) வந்த ஆழ்த்தவித்திலே
பஞ்சாக்ஷர ஷடாக்ஷர அஷ்டாக்ஷரங்கள் மகிழ்வாக ஜெபித்து வாழவே அருள்தருவாய் ( இம்முயல்தவம் பகீரதன் தவத்தினோடு ஒப்பீடாகப் பார்க்கலாம்)
4. நான்காமடியை மூவிதமாகப் பார்க்கலாம்
அ)
அஞ்சுமாறு எட்டும் மேவு அந்து வந்த ஆழ்விலே
எண்குணத்தானான சிவபெருமான் பிறர் அஞ்சும்படியாக மயானத்தில் மேவினாலும் அவனது திருவடி (எட்டும் மேவும் அந்து) வந்து அனுகிரஹிக்க ( மந்திரத் தவப்பயனாக )
அஞ்சு மாறும் எட்டு மேவு(ம்) அந்து உவந்து வாழவே
(நமது) அந்து (முடிவை நோக்கிய) அஞ்சு(தல்) மாறி ( பயம் தீர்ந்து) எட்டுதல் ( நிறைதல் ) கிட்டி உவந்து வாழவே செய்வார் அப்பெருமான்
இ)
அஞ்சும் ஆறும் மெட்டு மேவு அந்து வந்த வாழ்விலே
ஐம்முகச் சிவபெருமானே ஆறுமுகப் பெருமானாக உருவெடுத்து மெட்டு மேவு ( குன்றுதோறும் வீற்றிருக்கும்) அந்து வந்த ( அம்முருகப் பெருமானின் கழற்பெற்று ) வாழ்விலே ( மந்திரத் தவப்பயனாக )
அஞ்சு மாறும் எட்டு மேவு(ம்) அந்து உவந்து வாழவே
(நமது) அந்து (முடிவை நோக்கிய) அஞ்சு(தல்) மாறி ( பயம் தீர்ந்து) எட்டுதல் ( நிறைதல் ) கிட்டி உவந்து வாழவே செய்வார் அப்பெருமான்
உ)
அஞ்சும் ஆறு (யமுனை ஆற்றையே அஞ்சும்படி செய்த காளிங்கனை) எட்டு மேவு அந்து ( எட்டி அவன் தலைமேல் வீற்றிருந்த ஸ்ரீ கிருஷ்ணரின் கழல்) வந்த ஆழ்விலே ( மந்திரத் தவப்பயனாகக் கிட்டிமையால்)
அஞ்சு மாறும் எட்டு மேவு(ம்) அந்து உவந்து வாழவே
(நமது) அந்து (முடிவை நோக்கிய) அஞ்சு(தல்) மாறி ( பயம் தீர்ந்து) எட்டுதல் ( நிறைதல் ) கிட்டி உவந்து வாழவே செய்வார் அப்பெருமான்
முறையே பரம்பொருளை மூவிதமாக துதிக்கும் போது தவம் செய்வோரின் விரும்பு உருவாய் வந்து அருள்புரிவார் என்பது கருத்து
இப்பாடல் தொங்கல்களைத் தவிர அனைத்து அடியும் முழு மடக்காக அமைந்தது
வரமாக , தருவாயே, பெருமாளே என்பன வேண்டுதலாகவும் அமைந்தன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக