மாதவா மாலவா வாலமா வாதமா
மாதவா மாலவா வாலமா வாதமா
மாதவா மாலவா வாலமா வாதமா
மாதவா மாலவா வாலமா வாதமா
மாதவா மாலவா வாலமா வாதமா
மாதவா மாலவா வாலமா வாதமா
மாதவா மாலவா வாலமா வாதமா
மாதவா மாலவா வாலமா வாதமா
மாது அவா மால் அவா வாலமா ஆதமா
மாது அவா மால் அவா ஆலமா வாதமா
மாதவா மாலவா ஆல மா வாதமா
மாதவா மாலவா ஆல மா வாதமா
மாதவா மாலவா வால மா வாதமா
மாதவா மாலவா ஆல மா வாதமா
மாதவா மால் அவா ஆல மா ஆதமா
மாதவா மால் அவா வால மா ஆதம் மா
1.பெண் மீது ஆசை , மயக்குத் தரும் விஷய சுகங்களின் மீது அவா இவ்விரண்டும் இளமை யினாலா அதனால் தோன்றும் அன்பினாலா ?
2. அல்லது அவை விஷம் போன்றதா, பெரும் அவஸ்தைகளை ஏற்படுத்துமா ?
3. மாதவா! திருமாலே ! அவை ஆலகால விஷம் வெளிப்பட்டதே பாற்கடலைக் கடையும் போது தேவாசுர யுத்தம் நடந்த போது அது போன்றோ ?
4. மாதவா! திருமாலே! ஆல மரம் போன்று விரிந்து விளங்கக் கூடிய குடும்பத்தில் நடந்த மாபாரதம் போன்றோ ?
5. மாதவா திருமாலே ! இது குரங்குகள் நிகழ்த்திய பெரும் போரோ ( இராமாயணம்)
6. அன்றி மழு ஏந்திய பரசுராமர் சத்திரியர்களை அழித்த போரோ ?
7. இவை எல்லாம் நமக்கு சொல்லும் பாடம் யாதெனில் மாதவா ! திருமால் மீது அவா கொண்டால் அவன் நம்மை மூல ஆல வித்தைப் போல அன்பு கொண்டு நம்மைக் காப்பான்
(பகவத் கீதை அத்தியாயம் 15 - வசனம் 1
ஸ்ரீ-பகவான் உவாச
ஊத்வா-மூலம் அத:ஷாகம்
அஷ்வத்தம் ப்ராஹுர் அவ்யயம்
சந்தாம்ஸி யஸ்ய பர்ணானி
யஸ் தம் வேத ஸ வேத-வித்)
8. அவ்வாறே நமக்குக் குன்றா இளமையும் மிகுந்த அன்பும் திரு சமேத மால் அளிப்பான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக