வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை நன்றேத்த நில்லாமல் - வில்லானின்
கல்லாமை நீக்கிநின்று காத்தானைப் பாற்கடலிற்
கல்லாமை யென்றன்று நின்றானை - நல்லார்க்கு
நல்லானைக் குட்டத்துள் பொல்லா முதலைபிடி
கல்லாளைப் பாதத்தாற் காத்தானைச் சொல்லாத
கல்லாரைக் காணாவே கண்
வில்லான் - அர்ஜுனன்
கல்லாமை- மலையைப் போன்ற கூர்ம அவதாரம்
நல்லானை - கஜேந்திரன்
நன்முனிவன் - கௌதமர்
கல்லாள் - அகலிகை
ஸ்ரீமன் நாராயணனைத் திருப்பாவையிற் சொல்லியவாறு துதித்தேத்த , அவனது நாமம் கூறாதவரை நாம் கண்ணால் கூட காணவொட்டோம் என்ற உயர்பத்தி நிலை வருமென்றவாறு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக