சனி, 13 ஜனவரி, 2024

அசோகவனக் கலி விருத்தம்

 

வம்பார் மலர்மங்கை தம்பா லிருமிலையை
அம்பார் மகிழ்வுறவே அன்பார் தலைவனுமே
அம்பாற் றலைபத்து மந்தா ரெனவுரைத்த
அன்பாற் புனைமாலை தந்தா ளடியவர்க்கே
வம்பு ஆர் மலர் ( வாசம் மிகுந்த மலரில் வசிக்கும் மங்கை - மஹாலக்ஷ்மி - இங்கு சீதை ) தம்பால் இருக்கும் இலையை ( வெற்றிலை மட்டும் தான் இருந்தது அசோக வனத்தில்)
அழகிய உலகம் மகிழ அன்பும் அழகம் பொருந்திய தனது தலைவனான ( இராமன்)
அம்பால் பத்து தலையை அழித்தார் ( இராவணனை) இவ்வெற்றிச் செய்தியைச் சொன்ன அடியார்க்கு ( அனுமனுக்கு)
வெற்றிலையை வைத்து ஒரு அழகான மாலை செய்து தந்தாள் மிகுந்த அன்பால்
ஆதலால் அனுமாருக்கு வெற்றிலை மாலை விசேஷம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உரங்கமீது பள்ளி எழு சீர் விருத்தம்

உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை  யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...