வெள்ளி, 19 ஜனவரி, 2024

சுவாமி நாதன் மடக்குக் கட்டளைக் கலித்துறை

சங்கரி பாலனைச் சங்கரி பாலன் சிறைபிடிக்க
சங்கர நாதனுஞ் சங்கரி பாலனை ஏனெனவே
சங்கரி பாலனோ சங்கர நாதற்குத் தேர்ந்துரைக்க
சங்கர பாலனும் சங்கர நாதற்கா சானுமாமே

 

சங்கு அரி பாலன் - பிரமன்

சங்கரி , சங்கரன் பாலன் - முருகன்

தேர்ந்த்துரைப்பது - பிரணவத்தின் பொருள் 

 

Murugan - Kartikeya - Skanda - ~Our cute little Lord Murugan is teaching  his Dad,Lord Shiva(The Destroyer) about the real meaning of OM, accompanied  by Lord Vishnu(The Protector) and Lord Brahma(The Creator)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முடிவிலாத ஒரு எழு சீர் மண்டிலம்

முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ   படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...