வெள்ளி, 19 ஜனவரி, 2024

மயிலை அருணகிரிநாதர் விருத்தம்

தேனூறுந் தமிழ்ப்பாடிச் சேநெறியை நிலைநாட்ட
       சீர்காழி வந்துதித்த செல்வன்  இடமாக
கானேகுங் கொடிபாதம் வானாளும் வடிவழகன்
        காதலினால் வருடிவிடுங் கந்தன் எதிராக
மீனேரம் விழியுடையாள் சேவிடையா ருடனாக
        மேவுமார் மயிலைபதி மன்னு கவிராசா
மோனநிலை தவமிருந்து வேலவனின் புகழ்ப்பாடி
        முத்தமிழான் மறைநான்கும் சொற்ற பெருமானே 

எண்சீர் விருத்தம் 

 

தேன் ஊறும் தமிழ் பாடி சே நெறியை நிலை நாட்ட
சீர்காழி வந்து உதித்த செல்வன்  இடமாக

கான் ஏகும் கொடி பாதம் வான் ஆளும் வடிவழகன்
காதலினால் வருடிவிடும் கந்தன் எதிராக

மீன் நேர் அம் விழி உடையாள் சே விடையார் உடனாக
மேவும் ஆர் மயிலை பதி மன்னு கவி ராசா

மோன நிலை தவம் இருந்து வேலவனின் புகழ் பாடி
முத்தமிழால் மறை நான்கும் சொற்ற பெருமானே 

முதலடி திருஞான சம்பந்தரையும் இரண்டாமடி முருகப்பெருமானையும் குறிக்கின்றது , மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் அருணகிரிநாதர் சந்நிதிக்கு இடப்புறமாக திருஞான சம்பந்தரின் சந்நிதியும் நேர் எதிராக முருகப் பெருமான் சந்நிதியும் அமைந்திருக்கும் . நான்காமடி அருணகிரிநாதரைக் குறிக்கின்றது

சே நெறி - சைவ நெறி
கானேகும் கோடி - வள்ளி அம்மையார்
மீன் நேர் அம் விழியாள் - மீனைப் போன்ற அழகிய கண்களை உடைய உமையம்மை
சே விடையார் - சிவபெருமான்

 

 

Tiruppugazh - NeelangkoL mEgathin mayilmeedhe | Sri Gurubyo NamahaWho was Saint Arunagirinaadhar? - Quora

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...