செவ்வாய், 23 ஜனவரி, 2024

கண்ணன் கலிவிருத்தம் / வெண்பா

நூறுதலை நூறுதலை மாறுதலை பூமிபடா
வேறுதலை சீறுதொலை வீழமடி வீறுதவன்
போடநில நூறதலை போரதனி னாழநிலை
நாடியுணர்ந் தாளுமவன் ஞானவுரை போதுமுளே    

கலிவிருத்தம் 

மஹாபாரதத்தில் வரும் ஜயத்ரதன் பற்றி உங்களுக்குத் தெரியுமா? - Quora

ஜயத்ரதன் | மகாபாரத கிளைக்கதை| Jayathrathan|Mahabharatha Kilaikathai| Short  Story| - YouTube

நூறு தலை நூறுதலை மாறு தலை பூமி படா
ஏறுதலை சீறு தொலை வீழ மாடி வீறு தவன்
போட நிலம் நூற தலை போரதின் ஆழ நிலை
நாடி உணர்ந்து ஆளும் அவன் ஞானவுரை போதும் உளே  

நூறு கௌரவர்களும் அழிய , பகைவனின் தலை பூமியில் படாது
மேலே ஏறி சீறி தொலைவில் தவம் வீற்றிருக்கும் அவன் தந்தையின் மடி வீழும் படிச் செய்ய
அவனும் அதைப்  பதறி பூமியில் போட, அவனது தலை வெடித்தது பாரதப்போரில் ( ஜயத்ரதன் வதம் ) இது போன்று போரின் ஆழ்நிலை நாடி உணர்ந்து ஆளும் அவனது ( கண்ணனது) ஞானவுரை ( பகவத் கீதையை ) போதும் உ(ள்)ளே - எப்போதும் எண்ணுவாயாக

நூறுதல் - அழிதல்
மாறு - பகைவன் 

சற்றே மாற்றி வெண்பாவாக்கலாம்

நூறுதலை நூறுதலை மாறுதலை பூமிபடா
வேறுதலை சீறுதொலை  வீழமடி வீறுதவன்
போடநில நூறதலை போரதனிற் போதனைசெ
யீடிலிறை பீடுபுக ழோது  

ஈடு இல் இறை - இணையற்ற இறைவன்

பீடு - பெருமை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...