வியாழன், 14 மார்ச், 2024

திவ்வியப் பிரபந்தச் சிறப்பு

மாமகிழ் மாறன் சிறப்பை யுரைத்த மரத்தடியின்
மாமகிழ் மாறன் சிறப்பை யுரைத்த மதுரகவிப்
பாமகிழ்ந் தோத படிமீ ளுதித்த பனுவலினை
நாமகிழ்ந் தோத நரவாழ் வெடுத்தோ நனிசிறப்பே
#கட்டளைக்கலித்துறை

Nammalvar - Wikipedia

மா மகிழ் மால் தன் சிறப்பை மரத்தடியில் உரைத்த
மா மகிழ்மாறன் சிறப்பை உரைத்த மதுரகவி
பா மகிழ்ந்து ஓத படி மீள் உதித்த பனுவலினை
நாம் மகிழ்ந்து ஓத நர வாழ்வு எடுத்தோம் நனி சிறப்பே

திருமகள் மகிழ்கின்ற திருமால் தன் சிறப்பை மரத்தடியில் அமர்ந்து உரைத்த
பெருமை உடைய மகிழ மலர் மாலை அணிந்த மாறன்  (நம்மாழ்வார்) சிறப்பை உரைத்த மதுரகவிழாய்வார் பாசுரத்தை மகிழ்ந்து 12000 முறை ஓதிய நாதமுனிகள் சடகோபன் அருள் பெற்று உலகிற்கு மீண்டும் கொணர்ந்த 4000 திவ்ய பிரபந்தத்தை நாம் மகிழ்ந்து ஓதுவதற்காகவே இம்மானுடப் பிறப்பைச்  சிறப்பாகப் பெற்றோம் எனலாம்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அங்கிசேர் அறுசீர் மண்டிலம்

அங்கிசேர் பொறியா முக்கண்           அங்கிசேர் சான விக்கண்  தங்குசீர் கிரண மாறுஞ்          சண்முகத் தேவாய்த் தோன்று  மங்குதீர் நிச்ச லன்றன்   ...