புதன், 10 ஏப்ரல், 2024

குமாரசம்பவ விருத்தம்

 ஆறுடுத்து மாலகண்ட ராடவத்தை வானவ
     ராடவைக்க வேளனுப்பி வாளியேவித் தானவர்
சீறொடுக்கத் தேவியொத்துச் சேயுதிக்கக் கூடவே
      தேறமர்ந்து கூடிபேசிச் சீரெடுத்துச் சாரவ
ரூறொழித்து மீளெடுக்க வானிலத்தைத் தானவர்
     நேரெடுத்த வாணவத்தை யேறெடுத்துத் தீயினா
னீறழிக்க  நீலகண்டர் தீவிழிக்க வாறின
     ராறுதிக்கு  மாசிதோன்ற றானுதிக்க  வேண்டுமே

 

ஆறுடுத்தும் ஆலகண்டர் ஆழ் தவத்தை வானவர்
ஆட வைக்க வேள் அனுப்பி வாளி ஏவி தானவர்
சீறு ஒடுக்க தேவி ஒத்து சேய் உதிக்க கூடவே
தேறு அமர்ந்து கூடி பேசி சீர் எடுத்து சார் அவர்
ஊறு ஒழித்து மீள் எடுக்க வான் நிலத்தை தான் அவர்
நேர் எடுத்த ஆணவத்தை ஏறெடுத்து தீயினால்
நீறு அழிக்க நீல கண்டர் தீ விழிக்க ஆறினர்
ஆறு உதிக்கும் ஆசி தோன்றல் தான் உதிக்க வேண்டுமே 

கங்கையை தனது சிரத்தில் உடுத்தும், விடத்தைக் கழுத்தில் அடக்கியவருமான சிவபெருமானின் ஆழ் தவத்தை கலைக்க காம தேவனை அனுப்பி கணைகள் ஏவச் செய்து அசுரர்களின் சீற்றத்தை ஒடுக்க , அப்பெருமான் பார்வதி தேவியுடன் ஒன்று கூடி ஒரு சேயை ஈன்றெடுக்க தமக்குள் ஆராய்ந்து கலந்து பேசி தமக்கு நடந்த கேடுகளையும் ஒழிக்கும் பொருட்டு முடிவெடுத்தனர் .

என்றாலும் இந்த ஆணவ முடிவை தனது தீவிழியை ஒரு கணத்தில் திறந்து அவ்வேளை நீறாக்கினார் சிவபெருமான் , இதைப் பார்த்ததும் வானவர்கள் அடங்கினர் , ஒரு வழி உதிக்கவேண்டும் என்றால் ( முருகன் பிறப்பெடுக்க வேண்டுமென்றால்) அது தானாகத்  தான் நடக்கவேண்டுமே ( இறைச்சித்ததால் ) அன்றி தமது முயற்சியால் அன்று என்று விளங்கிக் கொண்டனர்

Why did Lord Shiva burn Kamadeva with his third eye? - Quora

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...