திருவின்றி மாலில்லை தேர்ந்துரைப்பர் ஞானி
திருவின்றி வாழ்வில்லை சிற்றுந் - திருவின்றி
வீடில்லை மேற்றவ மேற்கொண்டுங் காக்கவெமை
யீடில்லை யாரு மிவட்கு
#வெண்பா
திரு இன்றி மால் இல்லை தேர்ந்து உரைப்பர் ஞானி
திரு இன்றி வாழ்வு இல்லை சிற்றும் திரு இன்றி
வீடு இல்லை மேல் தவம் மேற்கொண்டும் காக்க எமை
ஈடு இல்லை யாரும் இவளுக்கு
திருமகளின்றி மால் இல்லை என்று ஞானிகள் தேர்ந்துரைப்பர் (அவர் என்றுமே திருமால் தான்) திருவின்றி ( செல்வமின்றி) சிறிதளவும் வாழ்வில்லை திரு(மகள்) இன்றி வீடு பெறும் வழி மேன்மையான தவம் புரினும் இல்லை. எம்மைக் (உயிர்களைக்) காக்க யாரும் ஈடில்லை இவளுக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக