தருககுருபர வருகவறுமுக வுருக வெருகணிவார் செருகநிசிசரர் தருகவிடுதலை மருக திருவணிவார் கருகரதிபதி பொருதசுரரணி யுருக விருவிசும்பா ருருகவருமன மிருகவிழிமன மரிக வருகிருந்தே #கலிவிருத்தம்
தருக குருபர வருக அறுமுக உருக எரு(க்)கு அணிவார் செருக நிசிசரர் தருக விடுதலை மருக திரு அணிவார் கருக ரதி பதி பொருத சுரர் அணி உருக இருவிசும்பார் உருக அரு மனம் மிருக இழி மனம் அரிக அருகு இருந்தே
பிரணவப் பொருளை எனக்குத் தர வருக ஆறுமுகனே என்று எருக்கணிந்த ஈசன் உருகினார் அசுரர்களைப் போரிட்டு எங்கட்கு விடுதலை தருவாயாக, திருமாலின் மருகரே என்று காமனைக் சாம்பலாகும்படி இழந்த போரிடும் தேவர்கள் அணி உன்னிடம் உருகுவார்
ஆனால் (எனக்கோ) உருக அரு மனம் (உருகாத மனம்) மிருக இழி மனம் (விலங்கைப் போன்று என்வாழ்வில் வாழ்கிறேன் உன்னை நினைத்துருகுவதில்லை) இந்நிலையை என்னருகில் இருந்து அரிவாயாக முருகா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக