அருவுருவரு வுருவிருமொரு தருவுறைகுரு செவியில் குருபரனுரை மறைமுதலுரை கிளிவுருவர புவியில் திருசுடர்வரை யுறைகவிமலை யிதபகருரை தமிழில் தரவருதரு மரையடிதொழ நிறைபெறுமுயி ரளியில் #கலிவிருத்தம்
அரு உரு அருவுரு இரும் ஒரு தரு உறை குரு செவியில் குருபரன் உரை மறை முதல் உரை கிளி உரு வர புவியில் திரு சுடர் வரை உறை கவி மலை இத பகர் உரை தமிழில் தர வரு தரு மரை அடி தொழ நிறைபெறும் உயிர் அளியில்
அரு உரு அருவுரு என்று மூன்று நிலையிலும் இருக்கும் ஒரு (ஒப்பற்ற) ஆல மரத்தடியில் இருக்கும் குருவான சிவபெருமானின் செவியில், குருபரன் உரை செய்த மறைமுதல் உரையான பிரணவத்தைக் , கிளி உரு எடுத்து வந்த, திருவண்ணாமலையைச் சேர்ந்த, கவியில் மலைப் போன்ற,
அருணகிரிநாதர் இதமளிக்கும் தமிழ்ப்பாடல்களாகப் புவியினில் தர வந்த கற்பக மரம் போன்றவர். அவர்தம் தாமரைப் பாதங்களைத் தொழ நமது உயிரானது இறையின் அளியில் (அருளில்) நிறை பெறுமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக