கோழிக் கொடியன் குமர னழகைக் குவலயத்தி
னாழித் தவறா நயந்தே யிருக்க நனிபுனையுங்
காழிப் புலவன் கவிபோன் முயலக் கடையனுக்கு
மாழித் துயிலு மரங்கன் மருக னருளுளதே
கோழிக் கொடியைக் கொண்ட குமரனின் அழகை இவ்வுலகில்
நாழிப் போதும் தவறாது நயந்தே இருக்க, மிக்க கவிகள் புனையும்
சீர்காழிப் புலவரான திருஞான சம்பந்தர் கவியைப் போல முயல
இக் கடையனுக்கும் பாற்கடலில் துயில்கொள்ளும் திருவரங்கனின்
மருகனான முருகனின் அருள் உள்ளதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக