திங்கள், 22 ஜூலை, 2024

மதி கதிர் உருளா

மதிகதி ருருளா மணிரத வருளா
மதிகதி தெருளா மறைமுதற் பொருளா
சதிபதி வெருளா செவியொரு சுருளா
பதிதுதி யருளா பணிமதி மருளா
#கலிவிருத்தம்



மதி கதிர் உருளா மணி ரத அருளா
மதி கதி தெருளா மறை முதல் பொருளா
சதி பதி வெருளா செவி ஒரு சுருளா
பதி துதி அருள் ஆ பணி மதி மருளா

சூரியனும் சந்திரனும் சக்கரமாகக் கொண்ட அழகிய தேரினுடைய அருளாளனே
மதியே (புத்தியே) கதி என்போர்க்கு விளங்காதவனே மறைக்கும் முதற்பொருளானவனே
சதி தேவியின் பதியே , அவர் பிரிவால் வெருள் கொண்டவனே , மங்கை ஒரு பாகன் என்பதால் ஒரு காதில் சுருள் (மகளிர் காதணி) அணிபவனே
பதியைத் துதிக்கும் படி ஆக்களை யருள்வாயாக பாம்பும் நிலவும் சூடும் பித்தா/ அல்லது என் மதியை மருளாத வாறு பணி பதியே என்றும் கொள்ளலாம் !

 

Hinduismus fürst shiva spirituelle ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உரங்கமீது பள்ளி எழு சீர் விருத்தம்

உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை  யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...