திங்கள், 8 ஜூலை, 2024

புரி கலிப்பா

புரிவடிவப் புரிநின்ற புரிசங்குச் சக்கரத்தான்
வரிவடிவம் வருமுன்னே  கடல்கடைந்த திருவுடையா
னரிவடிவ மெடுத்தவுணன் மடியமர்த்தி யுடல்பிளந்தான்
பரிவடிவச் சிரங்கொண்டான் பதம்பணியக்   கவிவருமே  

தரவு கொச்சகக் #கலிப்பா

படம் 

புரி வடிவப் புரி நின்ற புரி சங்குச் சக்கரத்தான்
வரி வடிவம் வரும் முன்னே கடல் கடைந்த திரு உடையான்
அரி வடிவம் எடுத்து அவுணன் மடி அமர்த்தி உடல் பிளந்தான்
பரி வடிவச் சிரம் கொண்டான் பதம் பணியக் கவி வருமே 


புரி - ஊர் , சங்கு

சங்கு வடிவான நகரம் ( புரி ) நின்றவன் - ஜகந்நாதன் 

மொழிக்கு வரிவடவம் தோன்றும் பண்டைக்  காலத்தில் கடல் கடைந்தான் 

அரி ( சிங்க) உருவாய் வந்து இரணியன் உடல் பிளந்தான் 

பரி வடிவ சிரம் கொண்டான் - ஹயக்ரீவன் 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உரங்கமீது பள்ளி எழு சீர் விருத்தம்

உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை  யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...