கருமநிறைவுற பலனுமுனதல வுணர வுரையுரைத்த
தருமநிலைபெற கொடுமைநிறைவுற வருவ னுகவுகமா
யருமைமருகனே சடையிலணிமதி புனையும் வெளிவிடையார்
பிரணவவுரையுரை குமரகுருபர தருக தமிழழகே
சீர் பிரித்து
கருமம் நிறைவு உற பலனும் உனது அல்ல உணர உரை உரைத்த
தருமம் நிலை பெற கொடுமை நிறைவு உற வருவன் உக உகமாய்
அருமை மருகனே சடையில் அணி மதி புனையும் வெளி விடையார்
பிரணவ உரை உரை குமர குரு பர தருக தமிழ் அழகே
பொருள்
கருமம் நிறைவாக செய்வதே நமது கடன் பலனின் மீது நமக்கு கட்டுப்பாடில்லை என்று உணர உரை யுரைத்த , தருமம் நிலைபெறுவதற்காகவும் அதருமம் அழியும் பொருட்டும் யுக யுகமாக தான் உதிப்பேன் என்றும் கூறிய திருமாலின் அருமை மருகனே சடையில் அழகிய நிலைவைச் சூடிய வெள்ளி விடையாரான ஈசற்கு பிரணவ பொருள் உரைத்த குமர குரு பரனே எமக்கு அழகு தமிழைத் தருவாயாக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக