மந்திரங்கொள் வேள்வியு மஞ்சனங்கொண் மேனியு
மங்கைதங்கு மார்பினன் மண்மடந்தை சூழ்ந்திடத்
தந்திரங்கொண் டைவரை தேர்நடத்தும் பாகனாய்ச்
சொந்தபந்தம் வீழ்த்திநல் வெற்றிவாகை சூடவே
பந்தனான நண்பனாய்ப் பார்விளக்கும் பரமனாய்ப்
பாரதத்தி னாயகன் பார்ச்சிறந்த மாணியன்
எந்திரங்கொள் வாழ்விலே ஏற்ற(ம்)பெற்று நாமுய
இங்குவந்த டைந்தனன் வையாவூர்க் கள்ளனே
எண்சீர் விருத்தம்
சீர் பிரித்து -
மந்திரம் கொள் வேள்வியும் மஞ்சனம் கொள் மேனியும்
மங்கை தங்கு மார்பினன் மண் மடந்தை சூழ்ந்திடத்
தந்திரம் கொண்டு ஐவரை தேர் நடத்தும் பாகனாய்
சொந்த பந்தம் வீழ்த்த நல் வெற்றி வாகை சூடவே
பந்தன் ஆன நண்பனாய் பார் விளக்கும் பரமானாய்
பாரதத்தின் நாயகன் பார் சிறந்த மாணியன்
எந்திரம் கொள் வாழ்விலே ஏற்றம் பெற்று நாம் உய்ய
இங்குவந்து அடைந்தனன் வையாவூர் கள்ளனே
பொருள்-
வேத மந்திரங்கள் உச்சரித்து வேள்வி நடத்த , தனது திருமேனிக்குத் திருமஞ்சனம் அடியார்கள் செய்ய உகந்து நின்றான் மங்கை தங்கு மார்பனான் திருமால் , அவன் திருமடந்தை மட்டும் அல்லாது பார்மகளுடனும் சேர்ந்து வீற்றிருக்கிறான், இக்காட்சியைக் காணும் போது , இவன் தான் தந்திரம் செய்து பாண்டவர்கள் வெற்றி பெற அவர்க்குத் தேர் கடவி கௌரவர்களை வெல்ல உடன் துணை நின்றான் , உறவினானாய் , நண்பனாய் , பரமானாய் , பாரதத்தின் நாயகனான கண்ணன் பாரின் சிறந்த பிரமாச்சாரியாகவும் இருந்தான் என்று சிந்தனை செல்கிறது !
எந்திரம் போல நாம் நடத்தும் வாழ்விலே நாம் ஏற்றம் பெற்று கதி காண , அவனே இன்று கள்ளப் பிராணாக வையாவூரில் வந்தடைந்தான் என்று எண்ணியதாம்
With the chants of Veda Mantras, and accepting Abisheka of his Bhakthas , the Lord Vishnu (Thirumaal) with Goddess Lakshmi in his bosom along with Bhoo Maatha (Goddess of Earth) flanked stands, while watching this my thoughts go to the Lord who used trickery, served as the charioteer to Arjuna and made the Pandavas win the great battle against their brothers Kauravas, played his role as a friend, relative and the supreme God , this hero of Mahabharatha who was also the World's greatest celibate, has perhaps come down as the Thief Lord ( கள்ளப் பிரான்) here in Vaiyaavoor (திருமலை வையாவூர்) in order to elevate souls like us from the drudgery of machine like life into greater realms!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக