நாவொடுக்கி நோன்பிருந்து ஞானமுற்று நாளெலாம்
பாவடுக்கி நன்றிசைக்க பாவையுள்ளம் போலவே
மூவடிக்கி ரந்துநின்ற மூப்பிலாத வாதிமேன்
மாவலிக்கு மாண்பளித்த மாவடிக்கண் டஞ்சமே
சீர் பிரித்து
நாவு ஒடுக்கி நோன்பு இருந்து ஞானம் உற்று நாள் எ(ல்)லாம்
பா அடுக்கி நன்று இசைக்க பாவை உள்ளம் போலவே
மூ அடிக்கு இரந்து நின்ற மூப்பு இல்லாத ஆதி மேல்
மாவலிக்கு மாண்பு அளித்த மா அடிக்கண் தஞ்சமே
பொருள்
பாவைகள் உற்றது போல நாவை ஒடுக்கி விரதம் இருந்து ஞானம் உற்று நாளெல்லாம், நாம் மூப்பிலாத ஆதியான திருமால் மேல் பா இசைத்தால் , நாமும் பாவைகள் அடைந்தது போல மூன்று அடி கேட்டு வந்து பின்பு மாவலியின் தலையின் கண் வைத்துத் திருவடி தீக்ஷை தந்த பெருமைக்குரிய திருவிக்ரமன் திருவடியின் கண் நாமும் தஞ்சம் புகலாமே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக