செவ்வாய், 17 செப்டம்பர், 2024

வேதனை ஈன்ற கட்டளைக் கலித்துறை

வேதனை யீன்ற வினைத்தொடர் கட்டாயம் விட்டொழிய
வேதனை யீன்ற வினைத்தொடர் கட்டாயம் விட்டொழிய
வேதனை யீன்ற வினைத்தொடர் கட்டாயம் விட்டொழிய
வேதனை யீன்ற வனைத்தொடர் கட்டாயம் விட்டொளியே
#கட்டளைக்கலித்துறை

 

 சீர் பிரித்து

வேதனை ஈன்ற  வினைத் தொடர் கட்டாயம் விட்டு ஒழியவே
தனை ஈன்ற வினைத் தொடர் கட்டு ஆயம் விட்டு ஒழிய ஏது
அனை ஈன்ற இனைத் தொடர்கள் தாயம் விட்டு ஒழிய
வேதன் (ஐ) ஈன்றவனைத் தொடர் கட்டாயம் விட்டு ஒளியே

பொருள்

வேதனைகளின் வித்தான வினைத் தொடர்களும் , தான் தனது என்ற அகந்தையை விளையவைக்கும் பாசக் கட்டான இரகசிய வினைகளையும், அன்னைதந்தை மூலம் வரக் கூடியாதான இன்னல்களைத் தர வல்ல இவ்வுடலும் விட்டொழியக் காரணமாக (ஹேது) உள்ள வேதனான பிரமனை ஈன்ற விட்டு(விஷ்ணு) என்னுமொளியைக் கட்டாயம் பின் தொடர்க!

படம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி