ஞாயிறு, 13 அக்டோபர், 2024

கவிச்சிங்கம் வெண்பா

கவிச்சிங்கங் கைவைக்க கல்லுங் கனகம்
புவிச்சிங்கம் வந்த புகழோர் - செவிச்சின்ன
மெம்பெரு மானை யியைந்த வழகுடையார்
தம்பெருமை சாற்றவுண்டோ சொல்

#வெண்பா

 

 சீர் பிரித்து

கவிச்சிங்கம் கை வைக்க கல்லும் கனகம்
புவிச்சிங்கம் வந்த புகழோர் செவிச் சின்னம்
எம்பெருமானை இயைந்த அழகு உடையார்
தம் பெருமை சாற்ற உண்டோ சொல் ?

பொருள் 


கவிச் சிம்மமான வேதாந்த தேசிகர் கை வைத்தால் கல்லும் தங்கமாகும் , இப்புவிக்குச் சிம்மமென வந்த புகழ் உடையவர், செவிச் சின்னம் இளையாழ்வாரைப் போல அழகுடைய இவரின் பெருமையை உரைக்கவும் சொல் உள்ளதோ ?

 

May be an image of temple

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அங்கிசேர் அறுசீர் மண்டிலம்

அங்கிசேர் பொறியா முக்கண்           அங்கிசேர் சான விக்கண்  தங்குசீர் கிரண மாறுஞ்          சண்முகத் தேவாய்த் தோன்று  மங்குதீர் நிச்ச லன்றன்   ...