பூவின்றி நின்றாற்கென் புந்தியே பூஷணமா
நாவன்பு நவின்றேத்த நறுமணப்பூ வாகாதோ
கோவென்று நின்றதிருக் கோட்டுறைப் பெருமானே
சாவந்து தீண்டும்வரை சமர்ப்பிப்பே னனைத்தையுமே
கலிவிருத்தம்
சீர் பிரித்து
பூ இன்றி நின்றான்கு என் புந்தியே பூஷணமாம்
நா அன்பு நவின்று ஏத்த நறுமணப் பூ ஆகாதோ
கோ என்று நின்ற திருக் கோட்டு உறைப் பெருமானே
சா வந்து தீண்டும் வரை சமர்ப்பிப்பேன் அனைத்தையுமே
பொருள்:-
பூவோ அலங்காரமோ இன்றி நின்ற முருகனுக்கு (நான் அவ்வாறு பூசை செய்யாததால்) எனது மனதே ஆபரணமாம்
மொழியால் ஏத்தும் சொற்களே மணம் பொருந்திய பூ என்று கொள்ளலாமல்லவா
புனிதமான அனைத்து மலைகட்கும் அரசனாக நின்ற பெருமானே (முருகா) இவ்வுடல் சாவைத் தழுவும் வரை அனைத்து செயல்களுமே உனக்கு அர்ப்பணித்தே செய்வேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக