செவ்வாய், 19 நவம்பர், 2024

சேவற் கொடியோய் விருத்தம்

சேவற் கொடியோய் சேவைக் கெளியோய் 

             தேவர் படையா டேவே                                            யுனைநாடாப்
 

பாவிக் கரியோய் நேசர்க் கெளியோய் 

              பாதைத் துணைவா நீயே                                       யுனைநாளுஞ்
 

சேவித் தடைவாய் தேனார் தமிழாட்

               சீதத் தடியைப் பாவாற்                                              றுதிபாட
 

வாவிக் கருள்வா யானைத் துணைவா 

               வாழித் துயிலார் மாயோன்                                   மருகோனே

 

#எண்சீர்விருத்தம் 


 சீர் பிரித்து

சேவல் கொடியோய் சேவைக்கு எளியோய் 

தேவர் படை ஆள் தேவே  உனை நாடாப்

பாவிக்கு அரியோய் நேசர்க்கு எளியோய் 

பாதைத் துணை வா நீயே உனை நாளும்

சேவித்து அடைவாய் தேன் ஆர் தமிழ் ஆள் 

சீதத்து அடியைப் பாவால் துதிபாட

ஆவிக்கு அருள்வாய் ஆனைத் துணைவா 

ஆழித் துயில் ஆர் மாயோன் மருகோனே

 

The holder of the rooster flag, easily please able, head of the army of Devas, evanescent to the sinners who don't know your love,  easily accessible to your devotees , please come with me as a guide (in my life) and also grant your Darshan and ability to compose poems on your holy feet (which is my ultimate solace) in the Thamizh language that is sweet as honey, to this soul, Oh Lord of Devasena and nephew of Lord Mahavishnu who sleeps in the milky ocean!

 

படம்

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...