பிறப்பிறப்பை நீக்கும் பரமனைப் பற்றுப்
பிறபிறப் பீன்றாற் பிழையோ - மறப்பகற்றிப்
பற்றப் பரமனையே பேறருள்வா னென்பதாற்
பெற்ற பிறப்பு மினிது
#வெண்பா
பிறப்பு இறப்பை நீக்கும் பரமனைப் பற்றுப்
பிற பிறப்பு ஈன்றால் பிழையோ மறப்பு அகற்றிப்
பற்றப் பரமனையே பேறு அருள்வான் என்பதால்
பெற்ற பிறப்பும் இனிது
பிறப்பு இறப்பை நீக்கும் பரமனைப் பற்று, அப்படியே அவன் பிற பிறப்பு எடுக்கும் படி நம்மை பணித்தால் அதில் ஏதும் பிழையோ? இல்லை! நமது மறப்பை அகற்றிப் பரமனையே பற்றப் பேறு அருள்வான் என்பதால் நாம் எடுத்த (எடுக்கவிருக்கும்) பிறப்பும் இனிது தான் !
surrender to the lord who ends the circle of birth and death, even if he grants us other births, he is sure to erase our forgetfulness and make us his devotee even in that birth, so , the birth we take ( or about to take) is also sweet!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக