செவ்வாய், 29 ஏப்ரல், 2025

மூவா மாலைமாற்று

மூவாவாமா வேனாதா வாறாதாரா வீசேயா
யாசேவீரா தாறாவா தானாவே மாவா வாமூ 

 

சீர் பிரித்து


மூவா வாமா வேல் நாதா ஆறு ஆதாரா ஈசே! யா யா!

சே வீரா தாறு ஆ வாதா நாவு ஏமா வா ஆ மூ  

 

பொருள்கோண்முறை

மூவா வாமா வேல் நாதா ஆறு ஆதாரா ஈசே சே வீரா தாறு ஆ வாதா நாவு ஏமா ஆ மூ வா யா யா!

 

பொருள்

மூப்பு என்பதில்லாத அழகனே , வேலேந்தும் நாதனே ஆறு ஆதாரங்களுக்கும் அதிபதியே ஈசனே , செம்மை பொருந்திய வீரனே கொத்துக் கொத்தாக வரும் அசுர சேனைகளைப் போரில் மாய்த்தவனே பொன் நா உடையவனே உயிர்களின் இறுதி நிலையில் வந்து தளைகளைக் கட்டுவாயாக! (முத்தியருள்வாயாக)

 

யா - தளை, கட்டுதல்

தாறு - கொத்து

மூ - மூப்பு , முடிவு 

 

One who does not age and always remains handsome, holding the Vel, one who manifests as the six chakras, my Lord! superlative warrior, one who destroyed clusters of Asura Senas in the war, one who is bestowed with a golden speech, when we Jivas reach the endgame, come and remove our bondage!

 #palindrome #மாலைமாற்று 

இம்மாலைமாற்று என்னும் வடிவப் பா காழிப் பிள்ளையாருக்கே சமர்ப்பணம்!

திருஞான சம்பந்தர் - THIRUGNANA SAMBANDAR

படம்

1 கருத்து:

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி