திங்கள், 28 ஜூலை, 2025

காதல்மக்கள் விருத்தம்

காதன்மக்க ளீன்றபெற்றொர் கட்டுமங்கை மற்றவர் ஶ்வேதன்மக்க ளைவர்மாதர் வாழவீழ விழியிலான் மாதர்மக்க ணூறவன்று வாதுசெய்த கீதைசொல் போதன்மக்க ளென்றுணர்ந்து போற்றிவாழு வையமே

 

 

காதல் மக்கள் ஈன்ற பெற்றோர் கட்டும் மங்கை மற்றவர் ஶ்வேதன் மக்கள் ஐவர் மாதர் வாழ வீழ விழிலான் மாதர் மக்கள் நூற அன்று வாது செய்த கீதை சொல் போதன் மக்கள் என்று உணர்ந்து போற்றி வாழு வையமே 

 

நமது அன்பு மக்களும், ஈன்ற பெற்றோரும் மணமுடித்த மங்கையும் மற்றவர்களும் கூட, பாண்டுவின் மக்களான பாண்டவரும் அவர்தம் மாதரான பாஞ்சாலியும் வாழும்படியாகவும் விழியற்ற திருதிராட்டிரன், காந்தாரியின் மக்களான கௌரவர்கள் அழிந்துபோகும் போகும் பொருட்டும் போர் செய்து அதன் நடுவில் கீதோபதேசத்தை போதித்தவனினான கண்ணபிரானின் மக்களே யாவரும் என்றுணர்ந்து இவ்வையத்து வாழ்வைப் போற்றி வாழ்வோமாக

 

Our loved children, parents who gave birtஹ் to us, our wedded wife(husband) and even all other beings are all the children of the one who enacted the great Mahabaratha war to save the sons of Pandavas and Draupadi at the behest of destroying the Kauravas(children of Drithirashtra and Gandhari) and the one who gave Gitopadesa in the battlefield (Krishna). Having realized thus let us live this life on earth as a celebration! 

 

படம் 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி