புதன், 4 பிப்ரவரி, 2026

அகக்குறள் வெண்பாக்கள்

விழிமொழியு மேன்மை விழைந்துவந்தார்  வேண்டார்

மொழிமொழியு முற்றா முறை


விழி மொழியும் மேன்மை விழைந்து உவந்தார் வேண்டார் 

மொழி மொழியும் முற்றா முறை 

Vizhi mozhiyum mEnmai vizhaindhu uvandhaar vENdAr 

mozhi mozhiyum mutraa muRai 


Those who understand the greatness of speaking with eyes, and want it and have actually experienced  the joy in it, do not resort to the lesser evloved method of speaking with the mouth


வேல்விழி நோக்கின் விழுவா ரெழுவேட்கை 

நூல்வழி செப்ப லரிது


வேல் விழி நோக்கின் விழுவார் எழு வேட்கை 

நூல் வழி செப்பல் அரிது 


vElvizhi nOkkin vizhuvaar ezhuvEtkai 

noolvazhi cheppal aridhu

Those who fall under the spell of lance like sharp eyes and the way the desire rises in them because of it, is hard to describe in a handbook form!


கண்ணின்ற காட்சி மறைவெய்து மெய்தாதே

யுண்ணின்ற தாக்கத் துணர்வு


கண் நின்ற காட்சி மறைவு எய்தும் எய்தாதே 

உள் நின்ற தாக்கத்து உணர்வு 


kaNNinRa kAtchi maRaiveythum eydhaadhE

uNNinRa thaakkath thuNarvu 


The picture that falls on the eyes can fade in sometime, but what does not fade and indeed stands as an everlasting thing is the effect it has caused internally!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கனிதரு சுவையோ எழுசீர் மண்டிலம்

கனிதரு சுவையோ கவிதரு மகிழ்வோ         கடும்வெயில் பின்வரு மழையோ  பனிதரு நிலவின் பதைவழி யொளியோ          படர்ந்தொளிர் பால்வெளி யழகோ  சுனைதரு மண...