அறத்தின் வழிநடந் தாற்றுஞ் செயலே
நிறைத்த வகத்தைத் தரும்
உரத்தி னுறுதி பயக்கு மறமே
பரத்தின் விழைவுந் தரும்
அடக்க மமைதி யளவிலா வாற்ற
றொடுத்துத் தருவ தறம்
பலவகைச் செல்வம் படைத்த வுலகிற்
றலைவழி யென்று மறம்
மறத்தின் மலிந்த செயறரு மாண்பு
மறத்தின் வழியே தகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக