செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

விதிவிலக்கிட்டவன் மடக்கு வெண்பா

 விதிவிலக் கிட்டவன் வீற்றிரு குன்றிற்

பதிவிளக் கிட்டவன் பாங்கை - மதிநிறுத்தி 

வண்ணத் தமிழ்புனைந்த வாக்கிற் கொருகவியை

யெண்ணத் தமிழ்புலர்ந்த தே



விதிக்கு விலங்கு இட்டவன் -  நான்முகனுக்கு விலங்கிட்ட முருகன்; அவன் வீற்றிரு குன்றான திருவேரகத்தில் பதியாகிய சிவபெருமானுக்குப் பிரணவப் பொருள் விளக்கிட்டவன், அவனது  பாங்கை மதியில் நிறுத்தி வண்ணத் தமிழ் புனைந்த வாக்கிற்கு ஒர் கவிஞன் என்ற பெயர் பெற்ற அருணகிரிநாதரை எண்ணத் (தானாக) தமிழ் புலர்ந்ததே (என்னிடமிருந்தும்)

விலங்கு வல்லின விகாரப் பட்டு விலக்கு என நின்றது 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சூதில் தோற்ற அறு சீர் மண்டிலம்

  சூதிற் றோற்றநல் லைவரின்         சோர்வ கற்றிய வார்சகன்  தூதிற்  சென்றனன் மீள்கொளத்        தோற்ற விடங்களை யாயினும் வாதிற் றீயவர் மாய்வுற    ...