செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

வஞ்சிக் கண் வைத்த மனம் வெண்பா

வஞ்சிக்கண் வைத்தமனம் வேறேது நாடாது

துஞ்சிக்கண் சாய்ந்தாலுந் தூங்காது - நஞ்சீதா

நல்லமுதா நாடவறா வாடவரை யாட்கொளுதே 

வெல்லமிது வேம்பைக் குழைத்து



வஞ்சிக்கண் வைத்த மனம் வேறேதும் நாடாது- பெண்ணின் காதலில் மனம் ஈடுபட்டால் அஃது வேறு ஏதின் பக்கமும் திரும்பாது 


துஞ்சி கண் சாய்ந்தாலுந் தூங்காது - துஞ்சிக் கண்ணும் உடலும் தூங்கச்  சென்றாலும் அம்மனம் தூங்காது எண்ணத்தில் பயணிக்கும்,

 நாள் தவறா ஆடவரை ஆட்கொள்ளும் இது நஞ்சா அல்லது அமுதா? - நாள் தவறாது ஆடவரை ஆட்கொள்ளும் இக்காதல் என்னும் அனுபவம் நஞ்சா அல்லது நல்ல அமுதமா 

வேம்பை குழைத்து வெல்லம் இது - இது வேம்பைக் குழைத்த வெல்லம் போன்றதாம் . 


குழைத்த என்ற பெயரெச்சம் குழைத்து என நின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மதிபணி மின்ன வெண்பா

 மதிபணி மின்ன மலர்நதி மின்ன விதிதலை யோடுவிரன் மின்ன - கதிதரு காசி கனலொடு மின்ன விரந்தனன ம் மாசை யகற்ற விறை