ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

காலால் வெண்பா

 காலாற் புவிவா னளந்தான் கதிதரு

மாலா லுயர்வார் மதிபெற்ற- நாலா
யிரம்பாடு நல்லாழ்வா ரேத்துதமிழ்ச் சொல்லே
வரம்பானால் வாழ்வாந் தலை


காலால் புவி வான் அளந்தான் - தனது கால்களால் வாமனாவதாரத்தில் புவியையும் வானையும் அளந்தவனான

கதி தரு மாலால் - வீடு பேறு என்னும் கதியை அளிக்க வல்ல திருமாலால்

உயர்வு ஆர் மதி பெற்ற - உயர்வும் அழகும் பொருந்திய மதியைப் பெற்ற

நாலாயிரம் பாடு - நாலாயிர திவ்வியப் பிரபந்தம் அருளிச் செய்த

நல் ஆழ்வார் ஏத்து தமிழ் சொல்லே - நன்மை பொருந்திய ஆழ்வார்கள் திருமாலை ஏத்திப் பாடிய தமிழ் வேதமே

வரம்பானால் வாழ்வு தலை ஆம் - நமது எல்லையாகக் கொண்டு நாம் பின்பற்றி வந்தால் வாழ்வானது சிறந்து விளங்கும்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சூதில் தோற்ற அறு சீர் மண்டிலம்

  சூதிற் றோற்றநல் லைவரின்         சோர்வ கற்றிய வார்சகன்  தூதிற்  சென்றனன் மீள்கொளத்        தோற்ற விடங்களை யாயினும் வாதிற் றீயவர் மாய்வுற    ...