செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

எந்தை முருகனை சிந்தியல் வெண்பா

எந்தை முருகனை யேற்ற தமிழ்பாடிச் 

சிந்தைமகிழ் பூசைசெய்து சேர்வனே யூமையற்குஞ்

செந்தமிழ்ச் செப்பீத லான்


ஊமையன் கும் செந்தமிழ் செப்பு ஈதலான் - செந்தமிழ் அறியாத ஊமையனாகிய எனக்கும் செந்தமிழ் செப்புவதற்கு அறிவளித்தவன் ஆகையால் 


எந்தை முருகனை - எனது தந்தை ஆகிய முருகப் பிரானை

ஏற்ற தமிழ் பாடி - ஏற்றமிகு தமிழ் மொழியாற் பாடி

சிந்தைமகிழ் பூசை செய்து சேர்வனே - சிந்தை மகிழும்படியாக பூசனைகள் செய்து அவனைச் சேர்வேன் (மனதளவில்) 

Because he has given the grace of speaking Chenthamizh to even a mute person like me, I will always be in praise and prayer of my father Murugan fondly praising him with esteemed Tamil language and do prayers at a mental level and join him!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சூதில் தோற்ற அறு சீர் மண்டிலம்

  சூதிற் றோற்றநல் லைவரின்         சோர்வ கற்றிய வார்சகன்  தூதிற்  சென்றனன் மீள்கொளத்        தோற்ற விடங்களை யாயினும் வாதிற் றீயவர் மாய்வுற    ...