வியாழன், 19 பிப்ரவரி, 2026

பாலனாய் நின்ற சிந்தியல் வெண்பா

 

பாலனாய் நின்ற பராசத்தி மைந்தனே 

யாலவா யண்ணற்கு மாசானாம் - வேலனாய்

ஞாலமீ டேவர்க்கு நல்கு


வேலனாய் ஞாலம் மீள் தேவர்க்கு நல்கு - வேலேந்தி தேவர்கட்கு தத்தமது உலகங்களை மீட்டுத் தந்த 


பாலனாய் நின்ற - என்றுமே இளமை குன்றாத குமரனாய் நின்றவனான 


பராசத்தி மைந்தனெ - அன்னை பராசத்தியின் மைந்தனே 


ஆலவாய் அண்ணலுக்கும் ஆசானாம் - ஆலவாயில் வீற்றிரும் இறைவனான சிவபெருமானுக்கும் ஆசானாம் 

முருகப் பெருமானின் வெவ்வேறு திருவிளையாடல்கள் கூறப் பெற்றன. அவன் வேலெடுத்து அவுணரடங்கத் தேவர்கட்கு மீண்டு விண்ணுலகத்தை ஈந்தது, என்றுமே இளமையான கோலம் கொண்ட பராசத்தி பாலனாய்த் திகழ்வது, குருமூர்த்தியாகத் தந்தையான இறைவன் சிவபிரானுக்கும் பிரணவப் பொருளைப் போதித்தது 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சூதில் தோற்ற அறு சீர் மண்டிலம்

  சூதிற் றோற்றநல் லைவரின்         சோர்வ கற்றிய வார்சகன்  தூதிற்  சென்றனன் மீள்கொளத்        தோற்ற விடங்களை யாயினும் வாதிற் றீயவர் மாய்வுற    ...