புதன், 18 பிப்ரவரி, 2026

கற்பனைக்கு எட்டா சிந்தியல் வெண்பா

கற்பனைக் கெட்டாக் கருவுரு கந்தன்றன் பொற்பதம் பற்றப் புனைகவிதை யாறனைய வற்பற்குந் தோன்று மகத்து


கற்பனைக்கு எட்டா கரு உரு- கற்பனைக்கு எட்டாத கருத்தாக இருப்பதுவும், அது உரு கொண்டு வெளிப்படுவதுவும் ஆகிய

கந்தன்றன் பொற்பதம் பற்ற - கந்தக் கடவுளது பொன் போன்ற பாதங்களைப் பற்றிட

புனை கவிதை ஆறு அனைய - புனையப் படும் கவிதைகள் ஆற்றைப் போன்று கட்டுக்கடங்காது

அற்பன்கும் அகத்து தோன்றும் - சிறியவனுக்கும் தன் அகத்தே வெளிப்படும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இரைதேடி எண்சீர் மண்டிலம்

  இரைதேடிச் சென்றுவந்தேன் பசியை யாற்ற        வெனதுயிரைக் காணவில்லை யென்செய் வேனோ குரைநீளு கூர்மைமிக்க வெயிற்று நாய்கள்            குறைவில்லை...