வியாழன், 19 பிப்ரவரி, 2026

காலனை சாடு நற் காலன் சிந்தியல் வெண்பா

காலனைச் சாடுநற் காலனைச் சித்தமா

மூலனை யாட்கொண்ட மூலனைச் - சூலைதீர்

சூலனைச் சொல்வதன்றோ சொல்



காலனை சாடும் நல் காலனை - மார்க்கண்டேயரைக் காப்பாற்ற காலனைக் காலால் உதைத்த நல்ல கதி அளிக்கும் பாதம் உடையவனை 


சித்தர்களின் பெருமை மிக்கவரான சுந்தரநாதரை திருமூலராக்கி ஆட்கொண்டு திருமந்திரம் தமிழ் செய்ய வைத்த அனைத்திற்கும் மூலமாக விளங்குபவனை 


சூலை தீர் சூலனை - திருநாவுக்கரசருக்குச் சூலை நோயைத் தீர்த்து அருள் பாலித்த சூலாயுதம் கொண்ட சிவபெருமானை

சொல்வது அன்றோ சொல் -  விவரிப்பது தானே சொல், பிற யாவும் சொல்லென்று அடங்குமா? அடங்காது என்பதாம் 


சிவபெருமானின் அடியார்க்கு அருள் பாலிப்பதில் உள்ள மிக்க கருணை குணத்தையும், மூலன் என்ற சொல்லால் பரத்துவத்தையும் இப்பாடல் கூறுகிறது. அத்துடன் அடியார் சரிதையும் சில கூறப்பெற்றன 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மன்றாடி போற்று மகவாகி எண்சீர் விருத்தம்

மன்றாடி போற்று மகவாகி யன்னை          வரைமக டந்தவேல் வாங்கி யவுணர்  குன்றாடப் போர்செய்து வானவர் மீளக்       குலங்காத்துக் குஞ்சர தேவி மணந்து ...