வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

மூன்று தமிழ் வெண்பா

மூன்றுதமிழ் வித்தகன் மூப்பறியா வேலவனெஞ் 

ஞான்றுமுறை நாயக னுள்ள நயந்தருள 

யான்றமிழா லேத்துவது மென்று  


மூன்றுதமிழ் வித்தகன் - இயல் இசை நாடகம் என்ற முத்தமிழிலும் வித்தகன்

மூப்பு அறியா வேலன் - என்றுமே இளமை குன்றாத மூப்பென்றொன்று அறியாத வேலாயுதத்தை உடையவன்

எ ஞான்றும் உறை நாயகன் - எக்காலத்திலும் இருக்கும் தலைவன் 

உள்ளம் நயந்து அருள - தனது உள்ளம் நயந்து அருள் பாலிக்கும் படியாக 

என்று யான் தமிழால் ஏத்துவது - எந்நாளில் அவனை நான் தமிழால் துதித்துப் பாடுவது 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சூதில் தோற்ற அறு சீர் மண்டிலம்

  சூதிற் றோற்றநல் லைவரின்         சோர்வ கற்றிய வார்சகன்  தூதிற்  சென்றனன் மீள்கொளத்        தோற்ற விடங்களை யாயினும் வாதிற் றீயவர் மாய்வுற    ...