வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

அறுசமயம் குறள் வெண்பா

அறுசமய மாறானான் மாயோ னுறுசமய மோங்குகட லீறென் றறி


அறு சமயம் ஆறானால் - ஆறு சமயங்களும் ஆறைப் போன்று என்று கொண்டால்

மாயோன் உறு சமயம் - மாயோனது பெருமைக்குரிய சமயமானது

ஓங்கு கடல் ஈறு என்று அறி - ஓங்கும் கடலைப் போன்று இறுதியானது என்று அறிவாயாக

அறு சமயங்கள் நதிகளாகத் திகழ்கின்றன, மாயோனின் உறு சமயம் ஓங்கு கடலாகத் தகிழ்கிறது, எவ்வாறு அனைத்து ஆறுகளும் கடலினில் சென்று கலக்குமோ அவ்வாறே அனைத்துச் சமயங்களும் மாயோன் உறு சமயத்தில் சென்றடையும் என்பது கருத்து




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புலர்வான் சிவக்க எழுசீர் மண்டிலம்

  புலர்வான் சிவக்கப் பரியேழைப் பூட்டிப்            புதிதாக நாளும் வருவான் மலர்வான் மலர்க ளெழுவா னுயிர்கள்           வலமாக நாளும் வருவான்   ப...