சனி, 21 பிப்ரவரி, 2026

ஐயற்கும் ஆசான் வெண்பா

 ஐயற்கு மாசானாய் நிற்கு மழகுருவிற்

பொய்யர்க்குச் சற்றும் புலப்படான் பற்றறுத்த

மெய்யர்க்கே மெய்வீட்டின் பேறருள்வான் - வையர்க்கும்

வானோர்க்கும் வாழ்வளித்த கோ 



வையர்க்கும் வானோர்க்கும் வாழ்வளித்த கோ - மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும் சூரனையும் அசுரர் குழாத்தையும் மாய்த்து வாழ்வு தந்த தலைவனான முருகன். செய்யுள் ஆதலின் வையத்தார்க்கு வையர்க்கு என நின்றது 


ஐயன் கும் ஆசானாய் நிற்கும் அழகு உருவில் - ஐயன் சிவபெருமானுக்கும் ஆசானாகத் திகழும் அழகு நிறைந்த சாமி நாத திருக்கோலத்தில் 


பொய்யர்க்கு சற்றும் புலப்படான் - பொய் நிறைந்தவர்களுக்குச் சற்றும் புலப் பட மாட்டான் 


பற்றறுத்த மெய்யர்க்கு மெய்வீட்டின் பேறு அருள்வான் - ஆனால் பற்றுகளைத் துறந்த மெய்யடியாருக்கோ மெய் வீட்டின் பேற்றை அருள்வான் !


aiyarkum aasaanaay nirkum azhaguruvil

poyyarkkuch chatrum pulappadaan patraRuththa 

meyyarkkE meyveettin pERaruLvAn  vaiyarkkum

vaanOrkkum vaazhvaLiththa kO 


The Lord who gave life to both earthlings and celestials by putting an end to Tarakasura and the Asuras, in his beautiful form as Swami Natha where he becomes the teacher to even his dad Lord Shiva, showers the ultimate blessing of salvation for those devotees who have cut off all attachments(other than him!). At the same time this same form remains hidden from those who are deceitful! 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஐயற்கும் ஆசான் வெண்பா

 ஐயற்கு மாசானாய் நிற்கு மழகுருவிற் பொய்யர்க்குச் சற்றும் புலப்படான் பற்றறுத்த மெய்யர்க்கே மெய்வீட்டின் பேறருள்வான் - வையர்க்கும் வானோர்க்கும...