வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

காலற்கும் காலனே சிந்தியல் வெண்பா

காலற்குங் காலனே மாலே மணிவண்ணா

சேலாளுங் கண்ணி சிறுத்தாம்பிற் கட்டுண்டாய்

மேலாமோ அன்பின் வலி



காலனுக்கும் காலன் நீ ,அவனுக்கும் ஆயுண் முடிவை குறிப்பது நீ தான் மாலே மணிவண்ணா, அப்படி இருக்கச் சேல் ஆளும் கண்ணி அசோதையின் சிறுத் தாம்பில் உன்னைக் கட்டச் சம்மதித்தாய், அன்பை விட வலிமை என்றும் மேல் ஆகுமோ? ஆகாது என்பதை விளங்கிக் கொள்கிறோம்

kAlarkung kAlanE mAlE maNi vaNNA
sElALung kaNNi siRuth thAmbin kattuNdAy
mElAmO vanbin vali

You become death to the Lord of Death too oh Lord Thirumaal(SriimanNarayana), maNivaNNaa, yet you submit yourself to be tied by the small rope of fish eyed mom Yashodha, Will power overpower love? No!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஐயற்கும் ஆசான் வெண்பா

 ஐயற்கு மாசானாய் நிற்கு மழகுருவிற் பொய்யர்க்குச் சற்றும் புலப்படான் பற்றறுத்த மெய்யர்க்கே மெய்வீட்டின் பேறருள்வான் - வையர்க்கும் வானோர்க்கும...