மாளாது மாதவன் மாதர்க்குத் தீமைசெயுங்
கேளாது கேசவன் கேளிர்க்குக் கேடழிக்கு
மூளாத மெய்வினையு மூழ்கவே - யாளா
யவற்கடிமை செய்த லணி
மூளாத மெய் வினையும் மூழ்கவே - மூளாத மெய்வினையும் மூண்டவையும் மூழ்குவதற்கு
மாளாது மாதவன் மாதர்க்கு தீமை செய்யும் - இடைவிடாமல் மாதவன் மாதர்க்கு இடர் கொடுப்பான்
கேளாது கேசவன் கேளிர்க்கு கேடு அழிக்கும்- கேளாமலே தம் உறவினருக்குக் கேசவன் கேட்டை அழிப்பான்
ஆளாய் அவனுக்கு அடிமை செய்தல் அணி- அவனுக்கு ஆளாகி அடிமை செய்வதே உயிர்களாகிய நமக்கு அழகு
மாதவன் ஒருவனே புருடோத்தமன் பிற உயிர்கள் யாவும் மாதர்கள் என்பதால் இவ்விடத்தில் மாதர் உயிரைக் குறிக்கிறது. கண்ணனாக மாதர்க்கு இடர் கொடுத்த விளையாட்டைப் பரம்பொருள் உயிர்கட்கு வாழ்வில் இடர்பாடு அமைத்து அவர்கள் மெய்வினையைத் தீர்க்கிறான் என்பதைச் சுட்ட. அவ்வாறே பரமனுக்கு அனைத்துயிரும் உறவாதலால் அவையும் உயிரையே குறிக்கின்றன. உயிர்களிடம் கேளாதே பரமன் அவர்கள் கேட்டை அழிக்கின்றான். இவ்விரண்டும் செய்தல் அவனது அளவிலாக் கருணையைக் காட்டுகிறது. இவ்விரு செயல்களையும் அவன் செய்வது முன் வினையும் வரும் வினையும் அழித்து உயிர்கட்குக் கதி அளிக்கவே, ஆதலால் பரமனுக்கு அடிமை செய்தலே உயிர்களுக்கு அழகாம்.
mALAdhu mAdhavan mAdharkkuth thEmaicheyung
kELAdhu kEsavan kELirkkuk kEdazhikku
mULAdha meyvinaiyum mUzghavE yALA
yavaRkadimai seytha laNi
The Lord of Sri-Madhavan keeps giving trouble to women,the same Keshava also removes the distress of his relatives in order to remove the Karma that has already unfolded and the ones which are yet to come. So, it is only befitting that we become his belonging and serve him!
The Leela /play of Krishna giving slight trouble to the cowherd women is to be taken as a metaphor The Paramatma giving seeming troubles in this life to the Jivas. As Narayana alone is Purushoththama and all other Jivas are considered to be women, his giving trouble(seemingly) to women is pondered about!
All JivAs are related to Paramatma, so Keshava also takes care of removing their distress even without their asking him to do this. This shows the kArunya Guna of Bhagavan. He does both of this to help the JivAs cross the ocean of samsAra by neutralizing their Karmic cycle. So, the duty of us as Jivas is to serve him unconditionally, wont this make our life beautiful?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக