இன்றுனதாள் போற்றி யியற்றமிழா லேத்தற்குச்
சென்றபிறப் பாற்றிய சீரென்னே செவ்வேளே
கொன்றையணி கூத்தற்கு மாசானே நன்றிசொல
நாடவறா தாசை யளி
இன்று உன தாள் போற்றி - இந்நாளில் உனது தாளைப் போற்றி
இயல் தமிழால் ஏத்தற்கு - இயல் தமிழ்ப் பாவால் வணங்கற்கு
சென்ற பிறப்பு ஆற்றிய சீர் என்னே - யான் முற்பிறப்பில் செய்த சீர் என்னவாக இருக்கும் அவ்வாறு ஏதேனும் உளதா ?
செவ்வேளே கொன்றை அணி கூத்தன்கும் ஆசானே - செவ்வேளே கொன்றையைத் தன் சடையில் புனைந்த கூத்தனாகிய சிவபெருமானுக்கும் ஆசானே
நன்றி சொல நாள் தவறாது ஆசை அளி - உனக்கு நன்றி தெரிவிக்க நாள் தவறாது ஆசையை அருள்வாயாக
செவ்வேளே சிவபெருமானுக்கும் ஆசானே உனது தாளைப் போற்றி இயற்றமிழால் உன்னை ஏத்தும் பேறு எமக்கு எவ்வாறு கிட்டியது, அது முற்பிறப்பின் ஊழ்வினையான என்ன, அன்று அது உனது கருணையினால் அமைந்தது, ஆதலால் இந்நன்றியை என்றும் மறவாதவாறு உன்னையே ஏத்தும் விருப்பத்தை எனக்கு நாள் ஒன்று தவறாது நீ தரவேண்டும். அனைத்தும் இறைவனின் கருணையால் அமைவதே அன்றி எமது முய்ல்வாலன்று என்பது கருத்து
indrunadhAL pOtri yiyatramizhA lEththaRkuch
chenRapirap pAtriya chIrennE chevELE
konRaiyaNi kUththaRku mAsAnE nanRichola
nAdavaRA dhAsai yaLi
Today, we are able to worship your feet by singing iyal thamizh songs, what did we do in the previous births to deserve this exaltation oh ChevvEL, who is even the teacher to Lord Shiva who adorns the konRai flowers on his matted locks, please grant me that we can be ever thankful and keep worshipping you.It is actually not our self effort or good Karma that gave rise to this great state we are in, but actually your unparallelled kindness and that is precisely why we should always remain thankful for this happening and to you!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக