வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

உரலோடு ஒடுங்க நேரிசை சிந்தியல் வெண்பா

உரலோ டொடுங்க வுடன்படுவான் குன்றை

விரலோ டெடுத்த விறலான் - கருவங்

கடந்தன் பளிப்பவர் கட்கு



குன்றை விரலோடு எடுத்த விறலான் - கோவர்தனம் என்னும் மலையை விரலாலே எடுத்த வலிமை மிக்க கண்ணபிரான் 

கருவம் கடந்து அன்பு அளிப்பவர்களுக்கு - கருவம் கொள்ளாமல் அதனைக் கடந்து அன்பை அவனுக்கு அளிப்பவர்களுக்கு 

உரலோடு ஒடுங்க உடன்படுவான் - அவர்கள் அன்புக்கிணங்கி உரலோடும் கட்டுப்படவும் உடன்படுவான் 

இந்திரன் கருவம் கொண்டு மழை பொழிந்ததால் விரலாலே கோவர்த்தன மலையை எடுத்துத் தன் ஊரைக் காத்தான் கண்ணபிரான், ஆனால் தனது தாய் அன்பிற்குப் பணிந்து உரலிலும் கட்டுண்ணச் சம்மதித்தான், பகவானை ஆணவத்தால் சற்றும் அணுக வியலாது ஆனால் அவன் அன்புக்குக் கட்டுப் படுவான் என்ற கருத்துக் கூறப்படுகிறது 


uralO dodunga vudanpaduvAn kunRai

viralO deduththa viRalAn karuvang

gadanthan baLippavar gatku 

Lord Krishna can be attained by love but never by showing force of ego, he lifted Govardhana hill to save the people of Vraj from the wrath of Indra, yet at the same time he submitted to be tied to a mortar to his loving mother Yashodha. Love is the ultimate force not ego, is the idea expressed.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இடைவிடா சிந்தியல் வெண்பா

இடைவிடா தேக்க நிலைமறக்கு மேதங்   கொடையென்பர் கொண்டார் குறிப்பிற் - கடைகாணிற்  காதல் கடவுளுக் கொப்பு