வந்த வினையும் வருகின் றவினையும் வீசியெறி
முந்து விரையு முகட்டைப் பிளக்கு முதுவுலகி
னுந்தி சுவற வுருமா வழிய வுமைபரிசாய்த்
தந்த வயில்வேற் சரவணன் றாளே சரணெமக்கே
வந்த வினையும் - ப்ராரப்த கர்மாவும்
வருகின்ற வினையும் - இனி வரவிருக்கும் ஆகாமி வினையும்
வீசியெறி - வீசி எறியும்
முந்து விரையும் முகட்டை பிளக்கும் - முன்பு விரைந்து ஓடி வந்து கிரௌஞ்சம் என்னும் மலையைப் பிளப்பதுமான
முது உலகின் உந்தி சுவற - தொன்மையான இவ்வுலகின் கடல் வற்றும்படிச் செய்த
உரு மா அழிய - மாமரமாக உருவம் கொண்ட சூரன் அழியும் படியாக
உமை பரிசாய் தந்த - உமா தேவியார் பரிசாகத் தந்த
அயில்வேல் - கூர்மையான வேலை ஆயிதுமாகக் கொண்ட
சரவணன் தாளே சரண் எமக்கே - சரவணப் பொய்கையில் உதித்த முருகப் பெருமானது பாதங்களே எமக்குச் சரணாம்
vandha vinaiyum varugin Ravinaiyum vIsiyeRi
mundhu viraiyum mugattaip piLakkum mudhuvulagin
undhi suvaRa urumA vazhiya vumaiparisAyth
thandha vayilvER saravaNan RALE saraNemakkE
The prize handed over by Uma Devi which plucks out and throws aside Prarabdha and Aagami karmas, that which rushes forth to split and destroy the Krouncha hill, dries up the seas of the old world, destroys Tarakasuran who stood in the form of a mango tree is the peerless sharp weapon called the vEl. He who holds this unique weapon that is Saravanan who originated in the lake of Saravana(thicket of reeds).His holy feet are our refuge!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக