புதன், 4 பிப்ரவரி, 2026

மறுமையின் மலர்ந்த காதல் வெண்பா

 உயிர்வலி நீக்கி யுளமகிழ் நாட்டுந்

துயரறக் காக்குஞ் சுடரா - முயர்வாம்
பொறுமையின்பு லர்ந்தநற் பூவொளி தேனாய்
மறுமையின்ம லர்ந்தகா தல்


உயிர் வலி நீக்கி உள மகிழ் நாட்டும் துயர் அறக் காக்கும் சுடராம் - உயர்வாம் பொறுமையின் புலர்ந்த நல் பூ ஒளி தேனாய் மறுமையில் மலர்ந்த காதல்

உயிர் வலியை நீக்கி உளத்தின் மகிழ்வை நாட்டும், துயர் அறவே நீக்கிக் காக்கும், உயர்ந்த குணமாகிய பொறுமையின் புலர்ந்த நல்ல பூவில் ஒளிந்திருக்கும் தேனைப் போன்ற மறுமையில் மலர்ந்த காதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விழிதரும் அறு சீர் மண்டிலம்

விழிதருங்  காத லின்ப மிடிமுன்வரு மின்ன லென்ன  மொழிதருங் காத லின்பு சுவைமுன்வரும் வாச மென்ன  கெழுதருங் காத லின்பு கிணற்றூறுநந் நீரின் வண்ண  ம...