புதன், 4 பிப்ரவரி, 2026

கடலோர வெண்பா - பிரிவு

 கடலோரக் காற்றிற் கசிந்துவரு நீரா

யுடலுள்ளஞ் சிந்தை யுனதாய் - மடலேறப்
பார்த்து மறுத்தேன் மதிதழுவ வாராயோ
காத்திருக்கேன் கார்த்திகே யா


கடல் ஓர காற்றின் கசிந்து வரும் நீராய் உடல் உள்ளம் சிந்தை உனதாய் மடல் ஏற பார்த்தும் மறுத்தேன் மதி தழுவ வாராயோ காத்து இருக்கேன் கார்த்திகேயா


கடலோரம் வீசும் காற்றின் தோய்ந்த நீரைப்போல எனது உடல் உள்ளம் சிந்தை அனைத்தும் உன்னால் நிறைந்த படி உள்ளேன், எனினும் நீ வருவதாகத் தெரியவில்லை, ஆதலின் மடலேறலாம் என்று பார்த்தேன் எனினும் அதையும் மறுத்தேன் , எனது மதியைத் தழுவ நீ வர மாட்டாயோ , நான் காத்துக் கொண்டுள்ளேன் கார்த்திகேயா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கனிதரு சுவையோ எழுசீர் மண்டிலம்

கனிதரு சுவையோ கவிதரு மகிழ்வோ         கடும்வெயில் பின்வரு மழையோ  பனிதரு நிலவின் பதைவழி யொளியோ          படர்ந்தொளிர் பால்வெளி யழகோ  சுனைதரு மண...