புதன், 4 பிப்ரவரி, 2026

நேயத்தே நின்ற நிமலன் குறள் வெண்பாக்கள்

1நேயத்தே நின்ற நிமலனைக் காயத்தே

காண்பார்க்கு வீடா முலகு 


நேயத்தே நின்ற நிமலனை காயத்தே 

காண்பார்க்கு வீடு ஆம் உலகு 


அன்பு என்னும் பண்பில் நின்ற அப்பழுக்கற்றவனை உடலிலும் காண்பார்க்கு இவ்வுலகே வீடு ஆகும் !


2பொறியைந்து மொன்றியிறை போற்று நெறியடைத 

னீக்கமற நின்றா னருள் 


பொறி ஐந்தும் ஒன்றி இறை போற்று நெறி அடைதல் 

நீக்கம் அற நின்றான் அருள் 

ஐம்பொறிகளையும் ஒன்றி இறையைப் போற்றுதல் என்னும் நெறியை அடைதல் என்பது நீக்கமற எங்கும் நிறைந்தானான இறைவன் தன் அருள்


3மெய்வருத்திச் செய்தவத்தின் மேலா மிடிவரினு

மெய்விளம்ப னீங்கா வினை  


மெய் வருத்தி செய் தவத்தின் மேல் ஆம்  மிடி வரினும் 

மெய் விளம்பல் நீங்கா வினை 


உடலை வருத்திச் செய்யும் தவத்தை விட மேலானது யாதெனின் செய்யும் எவ்வினையிலும் மிடி வந்தாலும் கூட உண்மை பேசுதலை என்றும் கடைபிடித்தல் 


4உயிருக்குண் மெய்யானான் மெய்க்கே யுயிரானா 

னுள்ளும் வெளியு முளன் 


உயிருக்குள் மெய் ஆனான் மெய்க்கே உயிர் ஆனான் 

உள்ளும் வெளியும் உளன் 


உள்ளும் வெளியும் உளன்- உள் என்னும் நுண்மை கருத்திலும் வெளி என்னும் பரந்த கருத்திலும் அதாவது எவ்விடத்திலும் உள்ளவனாகிய இறைவன் 


உயிருக்குள் மெய்யானான் - அனைத்து உயிர்கட்கும் உள்ளே ஒளிர்கின்ற உண்மை வடிவாகிய பரம்பொருளானான் 


மெய்க்கே உயிரானான்- உண்மை என்னும் கருத்துக்கே என்றும் உயிரைப் போன்று மிக நெருக்கமாக ஆனான் 


5சொல்லும் பொருளு மெனநின்ற தோற்றத்தா 

னில்ல மினிதுறைநந் நெஞ்சு 


சொல்லும் பொருளும் என நின்ற தோற்றத்தான் 

இல்லம் இனிது உறை நம் நெஞ்சு 

சொல்லும் பொருளுமாக நின்ற சிவ சத்தி நிலையின் தோற்றத்தை உடையவன் இல்லமாக இனிது இருப்பது நமது நெஞ்சமாகும் !







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கனிதரு சுவையோ எழுசீர் மண்டிலம்

கனிதரு சுவையோ கவிதரு மகிழ்வோ         கடும்வெயில் பின்வரு மழையோ  பனிதரு நிலவின் பதைவழி யொளியோ          படர்ந்தொளிர் பால்வெளி யழகோ  சுனைதரு மண...