புதன், 18 பிப்ரவரி, 2026

இணக்கம் என்று சிந்தியல் வெண்பா

 இணக்கமென் றென்று மியல்பினை விட்டுத்

தணிக்கவே சற்றும் பணியாதே யோம்பு 

குணக்கடல் கூறா யகம் 



இணக்கம் என்று என்றும் இயல்பினை விட்டு - பிறருடன் இணங்கி இருக்கவேண்டும் என்பதற்காக எந்நாளும் இயல்பினைத் தொலைத்து 


தணிக்கவே சற்றும் பணியாதே - மன விருப்பம் இன்றி சூழ்நிலையைத் தணிக்கும் ஒரே காரணத்திற்காகப் பணிதல் கூடாது 


குணக்கடல் கூறாய் அகம் ஓம்பு - குணக்கடலான இறைவனுடைய கூறாய் நமது அகமும் அதில் விளையும் இயல்பு படைக்கப்பட்டுள்ளது, அதை அந்நிலையில் வைத்துப் போற்றுக 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வேனாதா மாலைமாற்று குறட்செண்டுறை

வேனாதாவீ டாறாமா தீரா வாதாளீ சாவா வாசாளீ தாவாரா தீமாறாடா வீ தானாவே  #மாலைமாற்று