வியாழன், 19 பிப்ரவரி, 2026

வெற்றிசேர் வேல் இன்னிசைச் சிந்தியல் வெண்பா

 வெற்றிசேர் வேலும் விளையா டணிமயிலுங்

கொற்றக் கொடியாய குக்குடமுஞ் சிந்தைசெய 

நற்றுணையா நாத னருள்



வெற்றி சேர் வேல் - வெற்றியைச் சேர்க்கும் வேலும் 

விளையாடு அணி மயிலும் - விளையாடும் அழகான மயில்வாகனமும் 

கொற்றக் கொடி ஆய குக்குடமும் - முருகப் பெருமானின் கொற்றக் கொடி ஆம் சேவலும் 

சிந்தை செய - பத்தர்கள் சிந்தையில் அமர்த்த

நல் துணை ஆம் நாதன் அருள் - முருகப் பிரானின் அருள் நல்ல துணையாகுமாம் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சூதில் தோற்ற அறு சீர் மண்டிலம்

  சூதிற் றோற்றநல் லைவரின்         சோர்வ கற்றிய வார்சகன்  தூதிற்  சென்றனன் மீள்கொளத்        தோற்ற விடங்களை யாயினும் வாதிற் றீயவர் மாய்வுற    ...